Breaking News

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில்!

 


கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் முடிவடையும் நிலையில் இருப்பதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாங்கள் இந்த முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வரலாற்றில் முதல் தடவையாக ஒருமாத காலத்தில் வெளியிட நடவடிக்கை எடுத்தோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் கல்வி பொதுத் தராதர உயர் தரபரீட்சையை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புத்தகங்கள் அச்சிடும் நடவடிக்கை தற்போது முடிவடையும் நிலையில் இருப்பதால், ஜனவரி மாத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் புத்தகங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் 8 இலட்சம் மாணவர்களுக்கு பாதணி வழங்குவதற்காக வவுச்சர் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.