படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவனின் நினைவேந்தல் நிகழ்வு!
படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் புருசோத்தமனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவராக இருந்த செல்லத்துரை புருசோத்தமன் கடந்த 2008.11.01 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.
இவரது 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, சுடரேற்றி, மலர் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.