மெட்ராஸில் வளர்ந்த பசங்க யாருக்குமே சாதி தெரியாது- கார்த்தி !
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் 'மெட்ராஸ்' படம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அவர் பேசியதாவது, மெட்ராஸில் வளர்ந்த பசங்க யாருக்குமே சாதி தெரியாது. நமக்கு பேர் மட்டும் தான் தெரியும். அதை தாண்டி எதுவுமே பார்த்தது கிடையாது. அந்த கதையில் எனக்கு பிடித்திருந்தது சுவர் தான். உலக சினிமா மாதிரி ஒரு சுவரை சுற்றி ஒரு அரசியல் மட்டும் தான் என் கண்ணில் பட்டது. அதில் இருக்கிற கதாபாத்திரங்கள் மட்டும் தான் என் கண்ணில் பட்டது. அதை சாதி படமாக இப்போது வரை பார்த்ததில்லை.
மேலும், "நான் சாதி பார்ப்பதில்லை. அது அவரவர் பார்வையில் இருக்கிறது. இப்போது ஸ்கூலில் எதுக்கு ஒரே மாதிரி சீருடை கொடுக்கிறாங்க. வித்தியாசம் இருக்கக்கூடாது என்பதற்காகதான். நான் அப்படி வளர்க்கப்பட்டவன். எனக்கு அந்த வித்தியாசம் தெரியாது" என்றார்.