மின் பாவனையாளர்களுக்கு சிவப்புக் கட்டணப் பட்டியல் : மின்சாரசபை விசேட அறிவிப்பு!
50 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டணப் பட்டியலை அனுப்புவது குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் இலங்கை மின்சாரசபை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைவாக உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னரே மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சாரசபை தெரிவித்துள்ளது.
50 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டணத்தை அனுப்புவது குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைவாக மின்சாரம் பயன்படுத்திய ஒரு மாதத்தின் பின்னரே மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் பெரும்பாலான நுகர்வோர்கள் உரிய நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்துகின்றார்கள் என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழமையாக ஒரு மாதத்திற்கான கட்டணம் செலுவுத்த தவறியதன் பின்னர் சிவப்பு பட்டியல் வழங்கப்படும் என்றும், சிவப்பு பட்டியல் வழங்கப்பட்ட பின்னர் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ள மின்சார சபை அதன்பின்னரே மின்சாரம் துண்டிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
எனினும், 2023ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 5 இலட்சத்து 44 ஆயிரத்து 488 மின்வெட்டு மற்றும் மின் இணைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சராசரியாக ஒரு வருடத்திற்கு சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்கள் புதிய மின் இணைப்புகளைப் பெறுவதாகவும், இதனால் 2019 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் 5 இலட்சத்து 44 ஆயிரத்து 488 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை மேலும் குறிப்பிடுகிறது.
இலங்கை மின்சார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட இ-பில் முறையின் படி சிவப்பு கட்டணங்கள் வழங்குவது படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மிக விரைவில் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் நிலுவைத் தொகை அறிவிக்கப்படும் எனவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.