Breaking News

அரச பணியாளர்களுக்கு விசேட முன்பணம்!

 


அடுத்த வருடத்திற்காக அரச அதிகாரிகளுக்கு  விசேட முன்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 4,000 ரூபா முன்பணமாக வழங்கப்பட உள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்பணம் தொகை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 29ம் திகதி வரை வழங்கப்படவுள்ளது.

திறைசேரியின் இணக்கப்பாட்டுக்கு அமைய பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் இது குறித்து அறிவித்துள்ளார்.

இந்த முன்பணத்தை 2024 ஆம் ஆண்டிற்குள் வசூலிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.