Breaking News

10 ஆயிரம் மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை?


 இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 10 ஆயிரம் ஊழியர்களிடம்,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில்  விளக்கமளிக்குமாறு கோரி கடிதம் அனுப்பியுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

குறித்த ஊழியர்கள் அனைவரும் அண்மையில் சுகயீன விடுமுறையைப்  பதிவு செய்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியமை தொடர்பாக  விளக்கமளிக்குமாறு  கோரியே குறித்த கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை மின்சார சபை பேச்சாளர் பிரதி பொது முகாமையாளர் நோயல் பிரியந்த கருத்துத் தெரிவிக்கையில்” ஊழியர்கள் அளிக்கும் பதில்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய குற்றச்சாட்டில் இலங்கை மின்சார சபையில் ஊழியர்கள் 66 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் , ஊழியர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.