Breaking News

நான் விளையாட்டை விடமாட்டேன்- ரித்திகா சிங் உறுதி

 


சென்னையில், பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் 'காலணித் திருவிழா 2024' என்னும் நிகழ்ச்சியை பிரபல நடிகையும் தற்காப்பு கலைஞருமான ரித்திகா சிங் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் மாலில் கூடியிருந்த மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு கையசைத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்த அவர் அங்குள்ள பல்வேறு கடைகளுக்கு சென்று கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் பேசினார். அவரது வருகையால் அந்த கடையின் உரிமையாளர்களும், விற்பனையாளர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

இதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ரித்திகா சிங், "நான் விளையாட்டை விடமாட்டேன். என் வாழ்க்கையில் சினிமாவிற்கும் விளையாட்டிற்கும் ஒரே அளவு முக்கியத்துவத்தை கொடுப்பேன். பெண்கள் பலர் விளையாட்டிற்கு வரவேண்டும். இது உங்களை உடலளவிலும் மனதளவிலும் வலிமையாக்கும். இதனால் நீங்கள் அதிக வலிமை கொண்டவர்களாக மாறுவீர்கள்" என்று பேசினார்.

மேலும், ரஜினி சார் ஒரு லெஜண்ட் என்று கூறினார். ஞான்வேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'வேட்டையன்' திரைப்படத்தில் ரித்திகா சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.