Breaking News

ஒன்லைன் சட்டம் தொடர்பிலான புதிய தகவல்!

 ஒன்லைன் முறைமைகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தில் பல திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான அமைச்சரவையின் அங்கீகாரத்தின் ஊடாக மேற்படி சட்டமூலம் மேலும் வினைதிறனாகும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டம் தொடர்பில் நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (21) இடம்பெற்ற  மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டத்தின் பிரகாரம் சிவில் வழக்குகளை தாக்கல் செய்ய முடியும் எனவும் தடை செய்யப்பட்ட கருத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துக்கள் வெளியிடப்படுவதை தடுப்பதே இந்தச் செயலின் நோக்கமாகும் என்றார்.

தவறு செய்யும் ஒன்லைன் கணக்குகளைக் கண்டறிவதும், தடை செய்யப்பட்ட கருத்துக்களை மீண்டும் மீண்டும் தொடர்புகொள்வதைத் தடுப்பதும் இந்தச் சட்டத்தின் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சட்டத்தின்படி சமூக ஊடகங்களில் ஏதாவது கருத்துக்கள் வௌியிடப்பட்டால் , அதை வெளியிடுபவரே பொறுப்பேற்க வேண்டும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கு உரையாற்றிய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் புலஸ்தி குணவர்தன, 2021ஆம் ஆண்டில் 16,975 சம்பவங்கள் சமூக ஊடகங்களில் பதிவாகியுள்ளன.

அவற்றில் 182 துஷ்பிரயோக வழக்குகள் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றில், ஆபாச காட்சிகள் மற்றும் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் போன்ற சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளன என்றார்.