பாயும் புலி படத்தில் பயன்படுத்திய பைக்- வைரலாகும் ரஜினியின் புகைப்படம்!
பாயும் புலி படத்தில் தான் பயன்படுத்திய பைக்கின் மீது அமர்ந்து நடிகர் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஏவிஎம் படத்தயாரிப்பு நிறுவனம் பகிரந்துள்ளது.
ரஜினி பயன்படுத்திய இந்த பைக்கை ஏவிஎம் ஹெரிட்டேஜ் மியூசியம்மில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏவிஎம் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவுடன் பகிர்ந்துள்ளது.
அதில், " ஒரு பொக்கிஷமான தருணம்... ஏவிஎம் மியூசியத்தில் நீங்கள் மீட்டெடுக்கக்கூடிய ஒன்று. பாயும் புலியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயன்படுத்திய புகழ்பெற்ற பைக்கைப் பார்க்க வாருங்கள்" என்றார்.