Breaking News

லீப் வருடம் பிப்ரவரி 29 இல் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்??

 


கி.மு.45ம் ஆண்டில் ரோமை ஆண்ட ஜூலியஸ் சீசர் என்பவர் தான் லீப் வருடத்தை  உருவாக்கினார். அப்போது புழக்கத்தில் இருந்த ரோமானிய காலண்டரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 22 நாட்கள் கொண்ட கூடுதல் மாதம் சேர்க்கப்பட்டது. இந்த குழப்பத்தை தீர்க்க வானியலாளர் சோசிஜீன்ஸ், 365 நாட்களை கொண்ட புதிய காலண்டரை உருவாக்கினார். இதில் தான் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுதலாக ஒரு நாளை சேர்க்கும் நடைமுறை ஏற்பட்டது.

லீப் வருடத்தில் பிறந்தவர்கள் :

லீப் வருடத்தில்  பிப்ரவரி 29ம் தேதி பிறந்தவர்கள் என்றால் அவர்களின் பிறந்தநாள் எப்போதும் ஸ்பெஷல் தான். மற்ற மாதம், தேதிகளில் பிறந்தவர்கள் வருடந்தோறும் பிறந்தநாள் கொண்டாடுவார்கள் என்றால், லீப் வருடத்தில்  பிறந்தவர்கள் மட்டும் தங்களின் பிறந்த நாளை கொண்டாட நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டும். அப்படி வரும் பிறந்தநாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் இவர்கள் ஸ்பெஷலாக கொண்டாடுவார்கள். இவர்களின் பிறந்தநாள் மட்டுமல்ல, இவர்களின் குணாதிசியமும் தனித்துவமானது தான்.

​லீப் வருடத்தில் பிறந்தவர்களின் குணங்கள் :

லீப் வருடத்தில் பிறந்தவர்கள் தங்கள் பிறந்த நாளை கொண்டாடவே நான்கு வருடங்கள் காத்திருக்க குழந்தையில் இருந்தே பழகியவர்கள். அதனால் இவர்களுக்கு பொறுமை ரொம்ப அதிகம். இந்த குணம் அவர்கள் வளர வளர வாழ்க்கையின் பல விஷயங்களுக்கு அவர்களுக்கு உதவியாக இருக்கும். லீப் வருடத்தில் பிறந்த பலரின் வாழ்க்கை அனைவரும் மதிக்கும்படி, மதிப்புமிக்கதாகவும், தனித்துவமானதாகவும் இருக்கும். இவர்களின் அணுகுமுறையில் எப்போதுமே யதார்த்தம் இருக்கும். யதார்த்தமான குணங்கள், பண்புகளை இவர்களின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படும். இருந்தாலும் பெரும்பாலும் இவர்கள் பல விஷயங்களில் தனித்துவமான குணம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் 4ம் எண்ணிற்கு உரியவர்கள். அதனால் அமைதியான குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.

​பொறுப்பு :

லீப் வருடத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் நிலையான, சமநிலையான மற்றும் உறுதியான எண்ணங்களை கொண்டிருப்பார்கள். எதிலும் நம்பகத்தன்மையுடனும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இவர்களின் நேர்மையான குணம் இவர்களுக்கு மற்றவர்களிடம் நல்ல மதிப்பை பெற்றுத் தரும். அதனால் பொறுப்புகள், பதவிகள் இவர்களை தானாக தேடி வரும். பொறுப்புணர்வு, பகுத்தறிவு, விழிப்புணர்வு ஆகியவற்றையும் இவர்கள் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

காதல் உறவு :

இவர்கள் தங்கள் வாழ்க்கை துணைக்கு எப்போதும் உண்மையாக இருப்பார்கள். அதே போல் காதல் உறவில் எப்போதும் நிலைத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் எதிர்பார்க்கக் கூடியவர்கள். நட்பு, நண்பர்கள், காதல், திருமண என அனைத்து உறவுகளிடமும் தான் நேர்மையாக இருப்பது போல் அவர்களும் உண்மையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடியவர்கள். நண்பர்களிடமும், வாழ்க்கை துணையிடமும் நல்ல மதிப்பு வைத்திருப்பார்கள். இவர்கள் தனித்துவமான நாளில் பிறந்தவர்கள் என்பதால் மற்றவர்கள் இவர்களை எப்போதும் சுவாரஸ்யமாகவும், தனியான கவர்ச்சியுடனும் பார்ப்பார்கள்.

உடல்நலம் :

லீப் வருடத்தில் பிறந்தவர்கள் அதிகம் மன அழுத்தத்திற்கு ஆளாக கூடியவர்கள். சில குறிப்பிட்ட நோய்களால் மிக எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள். இவர்களின் கவனம் அதிகமாக வேலையிலேயே இருக்கும் என்பதால் இவர்கள் அதிகமான மனஅழுத்தம் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள். இவர்கள் தங்களின் உடல்நலனில் அதிகம் அக்கறை காட்ட வேண்டியது அவசியம்.

வேலை :

ஆனால் இவர்கள் வேலை என்று வந்து விட்டால் வெள்ளைக்காரன் தான். இவர்களின் உள்ளார்ந்த கடமை உணர்வு, அனைத்திலும் சரியாக இருக்க வேண்டும் என இவர்களை நேர்த்தியாக வைத்திருக்கும். இதனால் இவர்களின் குணங்கள் மற்றும் வேலைகள் மற்றவர்களால் மதிப்படும். இதை தக்க வேண்டும் என்பதற்காக இவர்களும் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தையும் மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள்.