Breaking News

சுதந்திரக் கட்சியின் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம்!

 


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன், பொதுச் செயலாளராக துமிந்த திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை குறித்த வழக்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன் விதானகே முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேற்படி வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரையில் நீடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.