Breaking News

RJ பாலாஜி-யின் புதியப் படம் வெளியான புது அப்டேட்!

 


2010 ஆம் ஆண்டு 92.7 பிக் FM-ல் ரேடியோ ஜாக்கியாக பணிப்புரிந்தார். அதில் பணியாற்றி இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இவர் தொகுத்து வழங்கிய டேக் இட் ஈசி, க்ராஸ் டாக் போன்ற நிகழ்ச்சிகள் மிகப் பெரிய ஹிட்டானது.

அதன் பிறகு ஆர்.ஜே பாலாஜி 2013 ஆம் ஆண்டில் இருந்தே தமிழ் படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதியின் நண்பனாக நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.

அதைத்தொடர்ந்து புகழ், ஜில் ஜங் ஜக், தேவி, போன்ற படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான LKG திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

2020 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி அப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இந்தியில் வெளியான 'பதாய் ஹொ' திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து கதாநாயகனாக நடித்து இருந்தார்.

சில மாதங்களுக்கு முன் கோகுல் இயக்கத்தில் வெளிவந்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்தார். ஆர் ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகை திரிஷாவை வைத்து இயக்கப்போவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது.

அதைத்தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் புதியப்படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. இவர் நடிக்கும் அடுத்த படத்தை குட் நைட் மற்றும் லவ்வர் போன்ற வெற்றி படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர். ஆர் ஜே பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இப்போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் பாலாஜி ஒரு கையில் கத்தியுடனும் மறு கையில் மெலுகுவர்த்தியை சிகரெட் போல் பிடித்துக் கொண்டும் அவர் அணிந்திருக்கும் சட்டை முழுக்க ரத்த கறைகள் படிந்தும் இருக்கிறது. இது ஒரு திரில்லர் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படத்தின் இயக்குனர், மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.