தேர்தலைப் பிற்போட முயற்சித்தால் நாட்டில் வன்முறை வெடிக்கலாம் - மைத்திரி!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் முன்வைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ஜனாதிபதித் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் எனவும் அதனை எந்த வகையிலும் ஒத்திவைக்க முடியாது எனவும் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தி இருந்தார்.
மேலும் தேர்தலைப் பிற்போட முயற்சித்தால் நாட்டில் வன்முறை வெடிக்கலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.