இங்கிலாந்து ரசிகரின் காதை கடித்து துப்பிய உருகுவே ரசிகர்... வீடியோ - THAMILKINGDOM இங்கிலாந்து ரசிகரின் காதை கடித்து துப்பிய உருகுவே ரசிகர்... வீடியோ - THAMILKINGDOM

 • Latest News

  இங்கிலாந்து ரசிகரின் காதை கடித்து துப்பிய உருகுவே ரசிகர்... வீடியோ


  பிரேசில் நாட்டில் நடந்து வரும் உலகக்கோப்பை
  போட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி உருகுவே அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 1-2 என்ற கோல்கணக்கில் உருகுவே அணியிடம் தோல்வி அடைந்தது.

  இந்த போட்டியை ரசித்துக்கொண்டிருந்த இங்கிலாந்து ரசிகர் ஒருவர் உருகுவே அணியின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல் உருகுவே அணி வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உருகுவே ரசிகர் ஒருவர் இந்த நபரின் காதை கடித்து துப்பியுள்ளார். இதனால் கடும் வலியால் அவதிப்பட்ட இங்கிலாந்து நபர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

  காதின் ஒரு பகுதியை இழந்த இங்கிலாந்து நபரின் பெயர் Robert Farquharson என விசாரணையில் தெரிய வந்துள்ளது. காதை கடித்த நபர் தலைமறைவாகிவிட்டதால் அவரை தேடும் பணியில் பிரேசில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த ஒரு நபர் வீடியோ எடுத்து அதை ஆதாரமாக நேற்று காவல்நிலையத்தில் இந்த வீடியோவை சமர்ப்பித்துள்ளார்.

  இங்கிலாந்து ரசிகர் Robert Farquharson அவர்களின் காதை கடித்த நபர் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக 0800 282 591 என்ற எண்ணுக்கு தகவல் கொடுக்குமாறு பிரேசில் போலீஸார் அறிவிப்பு செய்துள்ளனர்.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: இங்கிலாந்து ரசிகரின் காதை கடித்து துப்பிய உருகுவே ரசிகர்... வீடியோ Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top