ஐ.நா. விசா­ரணையில் விக்கினேஸ்வரன் சாட்சியமளிக்க முடியாது? - THAMILKINGDOM ஐ.நா. விசா­ரணையில் விக்கினேஸ்வரன் சாட்சியமளிக்க முடியாது? - THAMILKINGDOM
 • Latest News

  ஐ.நா. விசா­ரணையில் விக்கினேஸ்வரன் சாட்சியமளிக்க முடியாது?

  ஐ.நா. சர்­வ­தேச விசா­ரணை ஆணைக்­கு­ழு­விற்கு சாட்­சி­ய­ம­ளிப்­பது
  இலங்­கைக்கு எதி­ரான ஏகா­தி­ய­பத்­தி­ய­வா­தி­களின் சதித் திட்­டத்­துக்கு துணை­போகும் செய­லாகும். எனவே இதனை கடு­மை­யாக எதிர்க்­கின்றேன் எனத் தெரி­வித்த அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார பர­ண­கம ஆணைக்­கு­ழு­விற்கு வெளி­நாட்டு நிபு­ணர்­களின் ஆலோ­ச­னை­களை பெறு­வதில் எவ்­வி­த­மான தப்பும் இல்­லை­யென்றும் கூறினார்.

  இது தொடர்­பாக, சமூக ஒரு­மைப்­பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்­பான அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார மேலும் தெரி­விக்­கையில்; இலங்கை மீது யுத்தக் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி சர்­வ­தேச ரீதியில் எமது நாட்டை தனி­மைப்­ப­டுத்தி நெருக்­க­டியில் தள்­ளி­வி­டு­வதை இலக்­காக வைத்தே ஐ.நா. சர்­வ­தேச விசா­ரணைக் குழு நிய­மிக்­கப்­பட்­டது. 

  இது இலங்­கைக்கு எதி­ரான சதித்­திட்டம். எனவே, அர­சாங்கம் அதனை நிரா­க­ரித்து விட்­டது. எனவே, இவ்­வா­றா­ன­தொரு குழு­விற்கு இலங்­கை­யர்கள் எவரும் சாட்­சியம் வழங்­கக்­கூ­டாது. அதற்கு வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் விதி­வி­லக்­கா­னவர் அல்ல. 

  எவரும் இக் குழு­விற்கு சாட்­சியம் வழங்கக் கூடாது. அவ்­வாறு சாட்­சியம் வழங்­குவோர் இலங்­கைக்கு எதி­ரான ஏகா­தி­பத்­திய வாதி­களின் சதித் திட்­டத்­திற்கு துணை போகின்­ற­வர்கள் என்றே கரு­தப்­ப­டு­வார்கள். அப்­பட்­டி­ய­லி­லேயே அவர்கள் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­வார்கள். இதனை கடு­மை­யாக எதிர்க்­கின்றேன்.

  பர­ண­கம குழு 

  ஜனா­தி­ப­தியால் உள்­ளூரில் விசா­ர­ணை­க­ளுக்­காக நிய­மிக்­கப்­பட்ட மெக் ஷ் வெல் பர­ண­கம விசா­ர­ணைக்­கு­ழு­விடம் சொல்ஹெய்ம் அல்ல எவரும் சாட்­சி­யங்­களை வழங்­கலாம் இதனை எதிர்க்­க­வில்லை. ஏனென்றால் இக் குழு உண்­மை­களை கண்­ட­றி­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட நியா­ய­மான விசா­ர­ணை­களை நடத்தும் உள்ளூர்க் குழு­வாகும். 

  இதற்கு ஆலோ­ச­னை­களை பெறு­வ­தற்கு வெளி­நாட்டு நிபு­ணர்கள் நிய­மிக்­கப்­பட்­ட­மையில் எவ்­வி­த­மான தப்பும் இல்லை. இதன் மூலம் உள்ளூர் விசா­ரணைக் குழு­விற்கு சர்­வ­தேச ரீதியான அங்கீகாரம் மேலும் வலுப்பெறும் இந்நிலை உரு வாகும் போது எம்மை நெருக்கடியில் தள்ளிவிடும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணைக் குழுவின் பலம் இழக்கப்படும் நிலைமை உருவாகும் என்றார்.

  தொடர்புபட்ட செய்தி

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஐ.நா. விசா­ரணையில் விக்கினேஸ்வரன் சாட்சியமளிக்க முடியாது? Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top