இலங்கையின் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம் - கலந்து கொண்ட ஆதாரம் - THAMILKINGDOM இலங்கையின் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம் - கலந்து கொண்ட ஆதாரம் - THAMILKINGDOM

 • Latest News

  இலங்கையின் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம் - கலந்து கொண்ட ஆதாரம்


  காணாமற்போனோர் தொடர்பான ஆணைக் குழுவுக்கு
  ஆலோசனை வழங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட டெஸ்மன் டீ சில்வாவே இலங்கை அரசின் இரவு கேளிக்கை விருந்து உபசாரமொன்றில் கலந்து கொண்டதுடன் போருக்கு பின்னரான இலங்கை ''Sri Lanka after the War'' என்ற தலைப்பிலும் உரையாற்றியிருந்தார்.

  இது தொடர்பிலான செய்திகளையும் ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தோம் ஆனால் இன்று சில முன்னணி தமிழ் ஊடகங்களில் அவர் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுமில்லை உரையாற்றவுமில்லை என்று மறுப்பு வெளியிட்டுள்ளதாக செய்திகளை வெளியிட்டிருந்தன.

  ஆனால் கடந்த 2012 ஆம் ஆண்டு மேமாதம் குறித்த திகதியில் அவர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டமையையும் அங்கு அவர் உரையாற்றியமையும்  Tamilkingdom.org  தளத்திற்கு ஆதாரத்துடன் கூடிய அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.

  மகிந்தரின் விசாரணைக்குழு தலைவரான டெஸ்மன் டீ சில்வாவே (Rt Hon Sir Desmond de SilvaPCQC) அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார் என்பதையும் அறியத்தருகின்றோம்.  நிகழ்வு அழைப்பிதழ்


  இது தொடர்பான எமது முன்னைய செய்தி

  மகிந்தரின் கையாளே வெளிநாட்டு நிபுணர் குழு தலைவராம்- ஆதாரம் இணைப்பு

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: இலங்கையின் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம் - கலந்து கொண்ட ஆதாரம் Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top