Breaking News

உலகிலேயே மிகவும் மோசமானவர்களின் பட்டியலில் மகிந்தவுக்கு 4ஆவது இடம் (பட்டியல் இணைப்பு)

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

உலகிலேயே மிகவும் மேசமானவர்களின் பட்டியலில் மகிந்தவுக்கு
16ஆவது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கிவரும் றாங்கர் இணையம் (ranker.com) உலகளாவிய ரீதியில் நடாத்திவரும் கருத்துக்கணிப்பில் இலங்கை ஜனாதிபதி இன்று 4 ஆவது இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

அரைமணி நேரத்தில் 16ஆவது இடத்திலிருந்து நான்காவது இடத்தை அடைந்த மகிந்த இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் உலகிலேயே முதலாவது மோசமானவர் என்ற பட்டத்தை அடையவுள்ளார். வாசகர்களும் உங்கள் வாக்கினை செலுத்துமாறு வேண்டப்படுகின்றனர்.

உலகில் மாதாந்தம் 250மில்லியன் பார்வையாளர்களைக்கொண்ட அமெரிக்க இணையம் ஒவ்வொரு தடவையும் உலகில் உள்ள பலவற்றை வகைப்படுத்தி வந்துள்ளது அந்த வகைளில் உலகிலுள்ள மிகவும் மோசமானவர்கள்,குற்றவாழிகள்,சர்வாதிகாரிகள்,படுகொலையாளர்கள்,நேர்மையற்றவர்கள் என பல வழிகளிலும் மோசமானவர்களை 'The All-Time Worst People in History'  என வகைப்படுத்தப்பட்டு அவ்விணையம் கருத்துக்கணிப்பை நடாத்தி வருகிறது.

இந்த கருத்துக்கணிப்பில் தற்போது முதலாவது இடத்தை ரசியா படுகொலையாளன் ஜோசப் ஸ்ராலினும் சர்வாதிகாரி கிட்லர் இரண்டாவது இடத்திலும் இடி அமீன் நான்காவது இடத்திலும் ஓசாமா பின்லேடன் ஆறாவது இடத்திலும் சதாம் உசேன் ஒன்பதாவது இடத்திலும் காணப்படுகிறார்.

இதில் மகிந்த ராஜபக்சே 16வது இடத்திலும் கோத்தபாஜ ராயபக்சே 32ஆவது இடத்திலும் சோனியா காந்தி 34ஆவது இடத்திலும் தற்போது காணப்படுகின்றனர். இதில் வாசகர்களும் வாக்களிக்கும் முகமாக வாக்களிப்பு முறையினை காட்டியுள்ளோம் நீங்களும் விரும்பியவர்களை முன்னிலைக்கு கொண்டுவரலாம் என்பதனை அறியத்தருகின்றோம்.

வாக்களிப்பதற்கு இலகுவான வழி கீழே காட்டப்பட்டுள்ளது



The All-Time Worst People in History