லிபியாவின் சர்வதேச விமான நிலையத்தை போராளிகள் கைகளில் -காணொளி - THAMILKINGDOM லிபியாவின் சர்வதேச விமான நிலையத்தை போராளிகள் கைகளில் -காணொளி - THAMILKINGDOM
 • Latest News

  லிபியாவின் சர்வதேச விமான நிலையத்தை போராளிகள் கைகளில் -காணொளி

  எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

  லிபியாவில் சர்வதேச விமான நிலையமான திரிபோலி
  விமான நிலையத்தைக் கைப்பற்றியுள்ளதாக லிபிய போராளிகள் குழு தெரிவித்துள்ளது.

  இதனை உறுதிபடுத்தும்வகையில் திரிபோலி விமான நிலையத்தைக் கைப்பற்றிய லிபிய போராளிகள், அதனை கொண்டாடும் வகையிலான வீடியோ காட்சியை சமூக இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

  இதேவேளை இன்றைய தினம் அடையாளம் தெரியாத சில போர் விமானங்கள் திரிபோலி மீது தாக்குதல் நடத்தியதாக அங்கு வசித்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

  விடியும் வரையில் ஜெட் விமானங்கள் பறந்த சத்தமும், வெடிச்சத்தங்களும் கேட்டதாக திரிபோலியில் வசிக்கும் மக்கள் மேலும் குறிப்பிட்டதுடன், சம்பவம் தொடர்பிலான மேதிக தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

  கடந்த வாரங்களில் லிபியாவில் நடத்தப்பட்ட பாரிய விமானத்தாக்குதல் இதுவென்பதுடன், நேட்டோ படையின் ஆதரவுடன் கடந்த 2011 ஆம் ஆண்டு முஹம்மர் கடாபி கொல்லப்பட்டதன் பின்னர் நடைபெற்ற பாரிய விமானத் தாக்குதல் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

   
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: லிபியாவின் சர்வதேச விமான நிலையத்தை போராளிகள் கைகளில் -காணொளி Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top