பொட்டு அம்மான் கைதாம் -சிறிலங்காவின் அடுத்த புலிநாடகம் - THAMILKINGDOM பொட்டு அம்மான் கைதாம் -சிறிலங்காவின் அடுத்த புலிநாடகம் - THAMILKINGDOM
 • Latest News

  பொட்டு அம்மான் கைதாம் -சிறிலங்காவின் அடுத்த புலிநாடகம்


  தமீழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்
  துறை பொறுப்பாளராக இருந்த பொட்டம்மான், ஹாங்காங் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்காவால் பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது

  சண்முகலிங்கம் சிவசங்கர் என்ற இயற்பெயருடைய பொட்டம்மான் இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் தப்பிச் சென்று விட்டார் என்று பல காலமாகவே பேச்சு இருந்தது. அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கனடா நாட்டில் இருப்பதாகவும், ஹாங்காங் நாட்டிற்கு தப்பிச் சென்ற பொட்டம்மான் அங்கிருந்து கனடா செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் இணையம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

  இவ்வாறு பரவிய செய்தியை அடுத்து அதேசெய்தியை சில இணையங்களும் மேற்கோள்காட்டி செய்திகளை வெளியிட்டுள்ளன. அவரது உறவினர் ஒருவரே காட்டிக் கொடுத்திருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இவ்வாறு பொய்யான செய்திகளை வெளியிடுவதன் மூலம் அதன் பிரதிபலிப்புகள் எவ்வாறு இருக்கும் என்பதை அறிவதற்காக இலங்கை புலனாய்வுப்பிரிவின் திட்டமாகவே இதனை நோக்கமுடிவதோடு இலங்கை அரசின் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் அழுத்தங்களிலிருந்து தப்புவதற்கு காலத்திற்கு காலம் இலங்கை அரசாங்கத்திற்கு ‘‘புலி நாடகங்கள்‘‘ அரங்கேற்றப்பட வேண்டியது கட்டாயமாகியுள்ளது.


  தொடர்ந்தும் ‘‘மகிந்த அன்கோ‘‘ தனது ஆட்சியை தக்கவைப்பதற்கு இடையிடையே மலேசியாவிலுள்ள அப்பாவித் தமிழர்களை கைது செய்தமையும் பின்னர் அதிலொருவர் விமானத்தளபதி என்றமையும் அவர் 2002 இல் மலேசியா சென்றதாக கூறிய அதே இலங்கை அரசு 2006 ஆம் ஆண்டிற்கு பின்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதல்களை அவரே மேற்கொண்டதாகவும் செய்திகளை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பொட்டு அம்மான் கைதாம் -சிறிலங்காவின் அடுத்த புலிநாடகம் Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top