Breaking News

வடமாகாண ஆளுநராக பளிஹக்கார நியமனம் (2ம் இணைப்பு)

வடக்கு மாகாண ஆளுநராக எச்.எம்.ஜி.எஸ். பளிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.


இவர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியாகவும், வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளராகவும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதியாகவும் பதவி வகித்தவருமாவார்.

இதுவரை காலமும் கடமையிலிருந்த மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு சிவில் அதிகாரியான பளிகக்கார நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டைவிட்டு வெளியேறுகிறார்  வட மாகாண ஆளுநர்

வடக்குமாகாண ஆளுநராகக் கடமையாற்றும் ஜீ.ஏ.சந்திரசிறி, ஆட்சிமாற்றத்தை அடுத்து தனது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு ஆஸ்திரேலியாவில் குடியேறத் திட்டமிட்டுள்ளார்.என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. 

தற்போது யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியுள்ள அவர், நாளை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வந்து தனது உடமைகளை எடுத்துச் செல்வார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

புதிய ஜனாதிபதியின் கீழ் பணியாற்ற அவர் விரும்பவில்லை என்றும், இதனால் தனது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அவரது குடும்பத்தாருடன் சென்று குடியேற அவர் முடிவு செய்துள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. 

இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால, வடக்கு மாகாகண ஆளுநராக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியாகக் கடமையாற்றிய வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் வதிவிடப்பிரதி நிதியுமாகிய எச்.எம்.ஜீ.எஸ் பள்ளிகக்கார நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.