அனந்தி மற்றும் சிவாகரன் தமிழரசுக் கட்சியில் இருந்து இடைநீக்கம்
தமிழரசுக் கட்சிக் கொள்கைகள், தீர்மானங்களுக்கு முரணாகச் செய்பட்ட காரணங்களுக்காக உறுப்பினர் அனந்தி சசிதரன், கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் எஸ்.சிவாகரன் ஆகிய இருவரும் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் பதவியில் இருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகின்றனர்.
இவர்களுக்கான இடைநிறுத்தல் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. - இவ்வாறு தெரிவித்தார் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-
தமிழரசுக் கட்சிக் கொள்கைகள், தீர்மானங்களுக்கு முரணாகச் செய்பட்ட காரணங்களுக்காக உறுப்பினர் இருவரை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்சி தலைமையின் அறிவுறுத்தலுக்கமைய நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இவர்கள் இருவரும் தற்காலிகமாகவே இடைநிறுத்தப்படுகின்றனர். இருவரையும் கட்சியைவிட்டு நிரந்தரமாக நீக்குவதா, அல்லது தொடர்ந்து கட்சியில் வைத்திருப்பதா என்பதை பொதுச்சபை கூடி முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.








