Breaking News

முன்னாள் அமைச்சர்கள் பலர் மைத்திரிக்கு ஆதரவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 24 முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளனா்.


ஜனக்க பண்டார தென்னகோன், பியசேன கமகே, சரத் அமனுகம, ரொஜினோல்ட் குரே, அதாவுத செனவிரட்ன ஆகிய முன்னாள் அமைச்சர்களும் அதில் அடங்குகின்றனர்.

மேலும் ஜகத் புஷ்பகுமார, பீலிக்ஸ் பெரேரா, எஸ்.பி. நாவின்ன, விஜித் முனி சொய்சா, விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா)ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு இன்று சென்று தங்கள் ஆதரவினைத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.