நாட்டை விட்டுச் சென்ற இராணுவ அதிகாரிகள் நாடு திரும்பத் தீர்மானம்
நாட்டை விட்டு தப்பிச் சென்ற இராணுவ அதிகாரிகள் பலர் நாடு திரும்பத் தீர்மானித்துள்ளனர்.
2010ம் ஆண்டில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த போது, அவருக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் எனக் கருதி பழிவாங்கப்பட்டவர்களே இவ்வாறு நாடு திரும்ப உள்ளனர்.அப்போதைய அரசாங்கத்தினால் பழிவாங்கப்பட்ட பல உயர் இராணுவ அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற அதிக எண்ணிக்கையிலான உயர் இராணுவ அதிகாரிகள் வெகு விரைவில் நாடு திரும்ப உள்ளனர்.உயர் இராணுவ அதிகாரியொருவர் இந்த தகவலை உறுதி செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேபோன்று நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஊடகவியலாளர்களும் நாடு திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய சரத் பொன்சேகாவின் நீக்கப்பட்ட பட்டங்கள் பதவிகள் மீள அளிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.








