Breaking News

உலகிலேயே ஆபத்தான சிறைச்சாலை! அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியானது (காணொளி இணைப்பு)

 உலக அளவில் கலவரங்களும், வன்முறைகளும் அதிக அளவில் நடைபெறும் சிறைச்சாலை குறித்த அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியாகியுள்ளன.

தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் உள்ள Maranhao மாகாணத்தில் Pedrinhas என்ற சிறைச்சாலை உள்ளது.சுமார் 550,000 கைதிகளை கொண்ட இந்த சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே அடிக்கடி வன்முறைகளும், கலவரங்களும் நடப்பதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கைதிகளில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த வன்முறைகளால் சுமார் 75 கைதிகள் கொல்லப்பட்டனர், இதில் 3 கைதிகளை தலையை துண்டித்து கொன்றுள்ளனர்.

இடப்பற்றாக்குறை காரணமாக, ஒரே அறையில் அதிக எண்ணிக்கையில் கைதிகளை அடைப்பதால், வன்முறைகள் எளிதில் நிகழ்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வன்முறைகள் நிகழும்போது கைதிகள் இறப்பதோடு மட்டுமல்லாமல், கைதிகள் சிறைச்சாலையை விட்டு தப்பிக்கும் சம்பவங்களும் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆண் கைதிகள் தவிர பெண் கைதிகளும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சில பெண்கள் நிறைமாத கர்ப்பிணிகளாக இருப்பதால் சிறைச்சாலைக்குள்ளேயே பிரசவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், குழந்தைகளை சிறை அறைக்குள்ளேயே அவர்கள் வளர்த்து வரும் சூழ்நிலைகள் உள்ளதாக ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சிறைச்சாலையில் சில அதிகாரிகளை மாற்றியுள்ளதாலும், சில புதிய நீதிபதிகளின் வழிகாட்டுதல்களாலும் கடந்த சில மாதங்களாக வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.