Breaking News

வடக்கில் புலிக்கொடிகள் பறக்கவில்லை - ரணில்

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கில் எந்தவொரு அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என, நான் மகாநாயக்க தேரரிடம் தெரியப்படுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  


தேர்தலுக்கு பின்னர் தற்போது அந்தப் பகுதியில் அமைதி நிலவுகிறது. புலிக்கொடி எங்கும் இல்லை எனவும், தமிழர் கூட்டமைப்பு புலிக்கொடியை ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை.   நாட்டுக்குள் தமது பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத் தருமாரே கோருகின்றனர். 

யாழ்ப்பாண நிலமை குறித்து அந்த பிராந்தியத்துக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் மா அதிபரிடம் தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   இன்று கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.