Breaking News

மொஹமட் அமீருக்கு மீண்டும் வாய்ப்பு

பாகிஸ்தானின் கிரிக்கட் வீரர் மொஹமட் அமீர் மீண்டும் முதல்தர கிரிக்கட் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

2010ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக மொஹமட் அமீர் உள்ளிட்ட மூன்று பேருக்கு சர்வதேச கிரிக்கட் பேரவை 5 ஆண்டு தடை விதித்திருந்தது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் மொஹமட் அமீர் ஆறு மாதங்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் அவரை முதல் தர கிரிக்கட் போட்டிகளில் விளையாட அனுமதிக்குமாறு பாகிஸ்தானிய கிரிக்கட் சபை சர்வதேச கிரிக்கட் பேரவையிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதன் அடிப்படையில் அடுத்த வாரம் சர்வதேச கிரிக்கட் பேரவை தமது தீர்மானத்தை அறிவிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.அவருக்கு எதிரான தடை இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.