சிரியாவில் தாக்குதல் - பலர் பலி
சிரிய அரசாங்க படையினரால் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 32 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் தலைநகர் டமாஸ்கஸின் ஹமோரியா பிரதேசத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இதில் பலியானவர்களுள் ஆறு சிறார்களும் உள்ளடங்குவதாக, பிரித்தானியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டதாக மற்றுமொரு கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் சிரிய அரசாங்கம் எதனையும் உறுதிப்படுத்தவில்லை.








