Breaking News

தனது உயிருக்கு புலி ஆதரவாளர்களால் அச்சுறுத்தல்! என்கிறார் மஹிந்த

தான் அச்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்க்கையில் எதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டார் அதற்கு புதிய அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டுமென தெரிவித்துள்ளார்.

சமூக நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னாள் ஜனாதிபதிக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லையென, மஹிந்த ராஜபக்ஸவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ரோஹன் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஆறு வாகனங்களே வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும் 21 வாகனங்கள் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 27ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர் ஒருவர் அவரது பாதுகாப்பு தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக, இலவசமாக பேரூந்து ஒன்றை வழங்கியுள்ள போதிலும், அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எந்தவிதமான வாகனங்களையும் தரவில்லை என தெரிவித்துள்ளார்.