Breaking News

கிரிக்கட் வெற்றி முன்னாள் வீரர் பிலிப் ஹியூசுக்கு சமர்ப்பணம்

2015 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் உலகக்கிண்ண கிரிக்கட் வெற்றியை காலஞ்சென்ற முன்னாள் இளம் வீரர் பிலிப் ஹியூசுக்கு அர்ப்பணம் செய்வதாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் அறிவித்துள்ளார்.

மெல்போர்னில் நியுசிலாந்துக்கு எதிராக இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

போட்டியில் வெற்றிபெற்றதை தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க், கடந்த வருடம் ஷேன் அபார்ட் வீசிய பவுன்சர் பந்தில் உயிரிழந்த இளம் வீரர் பிலிப் ஹிக்யூசுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

பிலிப் ஹியூக்ஸூம், கிளார்க்கும் நீண்ட கால நண்பர்களாக இருந்துள்ளனர்.ஹியூக்ஸ் இறுதிச்சடங்கு நடைபெறும் வரை கிளார்க் அவரது வீட்டிலேயே இருந்துள்ளார். 25 வயதான பிலிப் ஹிக்யூஸின் மரணம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை மனதளவில் பெரிதும் பாதித்திருந்ததாகவும் அணித் தலைவர் தெரிவித்தார்.