மட்டக்களப்பில் ஈபிடிபி உறுப்பினருக்கு மரணதண்டனை - THAMILKINGDOM மட்டக்களப்பில் ஈபிடிபி உறுப்பினருக்கு மரணதண்டனை - THAMILKINGDOM

 • Latest News

  மட்டக்களப்பில் ஈபிடிபி உறுப்பினருக்கு மரணதண்டனை

  மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் கடந்த 2007ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த, ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவருக்கு நேற்று மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

  2007ஆம் ஆண்டு டிசெம்பர் 25 ஆம் நாள் வந்தாறுமூலை ஏபீசி வீதியைச் சேர்ந்த கே.எஸ்.பிரேமாவதி (வயது 25) என்ற குடும்பப் பெண் அவரது வீட்டில் கணவனுடன் உறங்கிக் கொண்டிருந்த வேளை, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

  இந்தக் கொலை தொடர்பாக, ஈ.பி.டி.பி உறுப்பினர் திலகன் என அழைக்கப்படும் பாலுதாஸ் கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

  இந்த வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டதை அடுத்து, திலகன் என அழைக்கப்படும் பாலுதாசுக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார் மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மட்டக்களப்பில் ஈபிடிபி உறுப்பினருக்கு மரணதண்டனை Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top