Breaking News

கூட்டமைப்பு மகிழ்ச்சியாக இருந்தால் ஆபத்து



ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் செயற்­பா­டுகள் குரைக்கும் நாயைப் போன்­றது. அறிக்­கை­களை வெளிப்­ப­டுத்­தியும் கட்­ட­ளை­களை பிறப்­பித்தும் ஒரு­நாட்டை அச்­சு­றுத்­து­வ­துடன் முடிந்­து­விடும் என தூய்மையான ஹெல உறுமய கட்­சியின் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.

எதிரி மகிழ்ச்­சி­யாக இருந்தால் நாம் கவ­ன­மாக செயற்­பட வேண்டும். இப்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மிகழ்ச்­சி­யாக செயற்­ப­டு­வது நாட்­டுக்கும் அர­சாங்­கத்­துக்கும் பாரிய சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­விடும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

தூய்மையான ஹெல உறு­மய கட்­சி­யினால் கொழும்பில் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை தொடர்பில் வர­வி­ருக்கும் இறுதி முடிவு இந்த நாட்டை எந்­த­வ­கையில் பாதிக்கப் போகின்­றது என்­பதில் இன்று நாட்டு மக்கள் அதிக கவனம் செலுத்தி வரு­கின்­றனர். குறிப்­பாக இப்­போது நாட்­டுக்கு எதி­ராக எழுந்­துள்ள சர்­வ­தேச அழுத்­தங்­களை புதிய அர­சாங்கம் எவ்­வாறு கையாள்­கின்­றது என்­பதில் பாரிய சிக்கல் நிலை­மை எழுந்­துள்­ளது. ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் அமெ­ரிக்கா முன்­வைத்த தீர்­மான வரைபை இலங்கை ஏற்­றுக்­கொண்­டதில் இருந்தே இந்த அர­சாங்­கத்தின் எதிர்­பார்ப்­பு என்­ன­வென்­பது தெளி­வா­கி­யுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை தொடர்பில் தீர்­மா­னங்கள் முன்­னெ­டுத்த வேளை­யிலும் மின்­சாரக் கதிரை கதை­களை கூறி­ய­போதும் அவை அனைத்தும் பொய்­யென ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறினார். அதேபோல் மஹிந்த ராஜபக் ஷ மக்­களின் ஆத­ரவை பெறவே இவ்­வா­றான கதை­களை கூறு­வ­தா­கவும் கூறி­னார்கள்.

ஆனால் இப்­போது அதி­காரம் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கைகளில் இருக்கும் போது மின்­சாரக் கதி­ரைக்கு செல்­ல­வி­டாது மஹிந்­தவை காப்­பாற்­றி­யது நான் என புக­ழாரம் சூட்­டு­கின்றார். அன்று இல்­லாத மின்­சாரக் கதிரை கதை­க­ளுக்கு இன்று உயிர் கொடுக்கும் வகை­யி­லேயே கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.

ஐக்­கிய நாடுகள் சபையில் நடக்கும் உண்மை நிலை­மை­யையோ அல்­லது சர்­வ­தேச நாடு­க­ளுடன் இந்த அர­சாங்கம் செய்யும் உடன்­ப­டிக்­கை­க­ளையோ இலங்கை மக்கள் அறி­ய­வில்லை. இலங்­கையின் ஊடக சுதந்­திரம் இன்று முழு­மை­யாக பறிக்­கப்­பட்டு மக்­களின் தகவல் அறியும் உரி­மையை பறித்­துள்­ளனர். ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் சபையும் அமெ­ரிக்­காவும் ஒன்­றி­ணைந்து நகர்த்தும் சதித்­திட்­டத்­துக்கு இலங்கை அர­சாங்­கமும் துணை போகின்­றது. இலங்­கையின் மனித உரிமை மீறல்கள் என்ற பெயரில் இவர்கள் மேற்­கொள்ளும் ஆக்­கி­ர­மிப்­பு­களை தடுக்க வேண்டும்.

இலங்கை மீது விசா­ர­ணை­களை மேற்­கொள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேரவை முயற்­சிக்­கின்­றது. அவ்­வாறு ஒரு நாட்டின் மீது விசா­ர­ணை­களை மேற்கொள்­வ­தாயின் முதலில் இஸ்ரேல் மற்றும் அமெ­ரி­காவின் மீதே விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் ஏனைய நாடு­களில் அவர்­க­ளது தலை­யீ­டு­களை மேற்­கொள்ள அனு­ம­திக்க முடியும். மனித உரி­மைகள் பேரவை என்­பது குரைக்கும் நாயைப் போன்­றது. இவர்கள் அறிக்­கை­களை வெளிப்­ப­டுத்­தியும் கட்­ட­ளை­களை பிறப்­பிப்­ப­தோடு முடிந்து விடும்.இவர்­களால் எந்­த­வொரு நாட்டின் மீதும் நேர­டி­யாக தலை­யிட முடி­யாது. ஒரு நாட்டின் மீது அழுத்­தங்­களை கொடுக்­கவும் அந்த நாட்டின் மீதான விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளவும் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் பாது­காப்பு சபை­யினால் மட்­டுமே முடியும். ஆயினும் ரஷ்யா,சீனா ஆகிய நாடு­களின் நேரடி தலை­யீடு இருப்­பதன் கார­ணத்­தினால் இந்­த­வொரு நாட்­டையும் இவர்கள் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது.

மேலும் இலங்­கையின் பிரி­வி­னை­வா­தி­களின் செயற்­பா­டுகள் இலங்­கையில் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிரி­வி­னை­வாத செயற்­பா­டுகள் இன்றும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அவர்­க­ளது தமி­ழீழ கொள்­கையில் இன்றும் மாற்றம் இல்லை. இன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துடன் இணைந்­துள்ள நிலையில் இவர்­க­ளது செயற்­பா­டுகள் பல­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எதிரி மகிழ்ச்­சி­யாக இருந்தால் நாம் மிகக்­க­வ­ன­மாக செயற்­பட வேண்டும். அதே நிலைமை இன்று ஏற்­பட்­டுள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்தவித தடைகளும் இன்றி அவர்களது செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றனர். அதேபோல் சர்வதேச மட்டத்திலும் அவர்களது பிரிவினைவாத செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர். அவ்வாறான நிலையில் அரசாங்கம் கவனமாக செயற்பட வேண்டும். ஆனால் இன்று அரசாங்கமே அவர்களின் செயற்பாடுகளை முன்னெடுக்க தகுந்த சூழலை உருவாக்கிக் கொடுக்கின்றது என்றார்.