Breaking News

அர­சாங்­கமும், கூட்­ட­மைப்பும் உரி­மை­களை சர்­வ­தேசத்திடம் பேரம்­பேசுகின்றன - தினேஷ் குற்றச்சாட்டு

ஜனா­தி­பதி சர்­வ­தேச விசா­ர­ணை­யையும் பிர­தமர் உள்­ளக விசா­ர­ணை­யையும் வலி­யு­றுத்தி கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­து­வதால் எது உண்­மை­யா­னது என மக்கள் குழம்­பி­யுள்­ளனர். சர்­வ­தேச விசா­ர­ணையா அல்­லது உள்­ளக விசா­ர­ணையா இலங்­கையில் நடத்­தப்­படும் என்­பதை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தெளி­வாக தெரி­விக்க வேண்டும் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­த்தன தெரி­வித்தார்.

ஐக்­கிய நாடு­களின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­து­வ­தாக ஜனா­தி­ப­தியும் சர்­வ­தேச தலை­யீ­டற்ற உள்­ளக பொறி­மு­றையை நடத்­து­வ­தாக பிர­த­மரும் தெரி­வித்­துள்ள நிலையில் இது தொடர்பில் மஹிந்த அணியின் நிலைப்­பாட்டை தெரிவிக்கும்போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் பரிந்­து­ரை­களை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யா­ள­ரிடம் உறு­தி­ய­ளித்­துள்ளார். அதேபோல் இலங்கை மீதான அழுத்­தங்­களை குறைக்க அமெ­ரிக்­காவின் பரிந்­து­ரையை நிறை­வேற்­று­வ­தா­கவும் ஜெனிவா சென்­றுள்ள அரச தரப்­பினர் உறு­தி­ய­ளித்­துள்­ளனர். ஆனால் இலங்­கையில் ஊட­கங்­க­ளுக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கருத்து தெரி­விக்­கையில்,

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் முன்­வைத்­துள்ள கோரிக்­கை­களை இலங்­கையில் நடை­மு­றைப்­ப­டுத்த அனு­ம­திக்க முடி­யாது என தெரி­வித்­துள்ளார்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்­னரும்

பொதுத் தேர்­தலின் பின்­னரும் இந்த நாட் டில் தேசிய அரசாங்கங்கள் அமைந்தன. இதில்

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் ஒன்­றி­ணைந்து இந்த ஆட்­சியை அமைத்­துள்­ளனர். அதேபோல் இன்று சர்­வ­தேச விசா­ர­ணையை கோரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் இந்த கூட்­ட­ணியின் பங்­கு­தா­ர­ராக செயற்­பட்டன. அவ்­வா­றான நிலையில் இன்று ஒவ்­வொ­ரு­வரும் தத்­த­மது தனிப்­பட்ட கருத்­துக்­களை முன்­வைத்து வரு­வது மக்­க­ளி­டையே குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த தேசிய அர­சாங்கம் இன்னும் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு இந்த நாட்டில் ஆட்­சியை மேற்­கொள்­வ­தாக கூறு­கின்­றது. அவ்­வாறு மிக நீண்­ட­காலம் இந்த நாட்டில் ஆட்­சியை மேற்­கொள்ளும் இவர்­க­ளிடம் ஒரு தெளி­வான தீர்­மானம் இல்­லா­விடின் இந்த நாடு மிகவும் மோச­மான வகையில் ஆக்­கி­ர­மிக்­கப்­படும். ஆகவே, இந்த நாட்டில் சர்­வ­தேச விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­டுமா அல்­லது உள்­ளக விசா­ர­ணை­களை மேற்­கொள்­வார்­களா என்­பதை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தெளி­வாக மக்­க­ளுக்கு தெரி­விக்க வேண்டும். இந்த நாட்டு மக்கள் இவர்­களை நம்பி வாக்­கு­களை வழங்­கி­ய­மைக்கு இந்த அர­சாங்கம் எந்­த­ளவு உண்­மை­யாக உள்­ளது என்­பதை இவர்கள் வெளிப்­ப­டுத்­தி­யாக வேண்டும்.

அர­சாங்­கமும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் இந்த நாட்டு மக்­களின் உரி­மை­களை சர்­வ­தேச தரப்­பிடம் பேரம்­பேசும் வகையில் செயற்­பட்டு வரு­கின்­றனர். இலங்­கையில் நடை­பெற்ற யுத்­தத்தின் போது இடம்பெற்­ற­தாக கூறப்­படும் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­களில் எமது இரா­ணுவ வீரர்­க­ளையும் நாட்­டையும் காவு­கொ­டுக்கும் வகையில் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரு கின்றன. அதேபோல் விடுதலைப் புலிகளை நியாயப்படுத்தி நாட்டில் தனி மாநிலத்தை உருவாக்கும் முயற்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது. ஆகவே இவை அனைத்துக்கும் முற்றுப் புள்ளி வைத்து மீண்டும் நாட்டில் உண்மை யான நல்லாட்சியை உருவாக்க வேண்டும் என்றார்.