Breaking News

மாலைதீவு ஜனாதிபதி வருகை தந்த கப்பல் திடீர் வெடிப்பு



சவூதி அரேபியாவுக்கு ஹஜ் யாத்திரை சென்ற மாலைதீவு நாட்டின் ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கயூம் மற்றும் அவரது துணைவியார் போன்றோர் மாலைதீவுக்கு திரும்பும் வழியில் அவர்கள் பயணித்து வந்த கப்பல் வெடிப்புக்குள்ளாகியுள்ளது.

இவ் வெடிப்பு சம்பவத்தில், ஜனாதிபதியின் துணைவியாருக்கு சிறு சிறு உடற்காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் மாலைதீவில் உள்ள இந்திரா காந்தி ஞாபகார்த்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாலைதீவின் ஜனாதிபதியான கயூம் எதுவித காயங்களும் இன்றி இவ் விபத்தில் இருந்து தப்பியுள்ளார்.

இத் திடீர் வெடிப்புக்கான காரணம் என்னவென்று இதுவரை சரிவர கண்டறியப்படாத நிலையில், அக் கப்பலின் இயந்திர கோளாரினால் அவ் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றிருக்க கூடும் என நம்பப்படுகின்றது.