காணாமல் போனவர்கள் தொடர்பான 10000 முறைப்பாடுகளுக்கு தீர்வு இல்லை
காணாமல் போனவர்கள் தொடர்பான 10000 முறைப்பாடுகளுக்கு இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படகிறது.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடாத்த புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.மேலும் ஆணைக்குழுவிற்கு புதிதாக இரண்டு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.








