Breaking News

பிள்ளையானை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிள்ளையானின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதனால் அவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நிதவானிடம் கோரியிருந்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு நீதிமன்ற பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டியஇ நவம்பர் மாதம் 4ம் திகதி வரையில் விளக்க மறியல் உத்தரவினை நீடித்துள்ளார்.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான விசாரணைகளுக்காக சென்றிருந்த போது பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்தக் கொலை தொடர்பில் ஏற்கனவே இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பிள்ளையானின் மற்றுமொரு நெருங்கிய சகவான சரன் என்பவர் தற்போது சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அவரும் இந்தக் கொலையின் முக்கிய சூத்தரதாரி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2005ம் ஆண்டு நத்தார் பண்டிகை விசேட ஆராதனையின் போது ஜோசப் பரராஜசிங்கம் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியிருந்தார்.