ரணிலுக்கு இடுப்பிலுள்ள ஆடையும் இன்றியே வெளியேற வேண்டிவரும்- பொதுபல - THAMILKINGDOM ரணிலுக்கு இடுப்பிலுள்ள ஆடையும் இன்றியே வெளியேற வேண்டிவரும்- பொதுபல - THAMILKINGDOM
 • Latest News

  ரணிலுக்கு இடுப்பிலுள்ள ஆடையும் இன்றியே வெளியேற வேண்டிவரும்- பொதுபல

  ரணில் விக்கிரமசிங்கவின் தேவைக்கு ஏற்ப அரசியலமைப்பை மாற்ற முனைந்தால், அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். அதனைத் தீ மூட்டி எரிப்போம். ரணில் விக்கிரமசிங்கவுக்கு இறுதியில் இடுப்பில் ஆடையும் இன்றியே அரசாங்கத்திலிருந்து செல்ல வேண்டி வரும் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்துஞானசார தேரர் குறிப்பிட்டார்.

  கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

  தமிழர்களின் தேவைக்கு ஏற்ப செயற்படுவதற்கு பிரதமர் முனைகின்றார். அரசியலமைப்பை மாற்ற நியமிக்கப்பட்டுள்ள செயற்குழுவில் உள்ள அனைவரையும் பார்க்கும் போது வாந்தி வருகின்றது. அனைவரும் அரச சார்ப்பற்ற நிறுவனங்களின் முக்கிய முகவர்கள்.

  நாம் அரசாங்கத்திடம் தெளிவாகக் கூறுகின்றோம். தமிழ் மக்களின் உள்ளத்தை சந்தோஷப்படுத்த இராணுவ முகாமை அகற்றி, அரசியலமைப்பை மாற்ற முன்வருவதாயின், தயவு செய்து விகாரைகளுக்குரிய நிலங்களையும் விடுவியுங்கள் என்பதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: ரணிலுக்கு இடுப்பிலுள்ள ஆடையும் இன்றியே வெளியேற வேண்டிவரும்- பொதுபல Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top