உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் 3ம் திகதி வெளியிடும் சாத்தியம் - THAMILKINGDOM உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் 3ம் திகதி வெளியிடும் சாத்தியம் - THAMILKINGDOM
 • Latest News

  உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் 3ம் திகதி வெளியிடும் சாத்தியம்

  2015ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள், ஞாயிறு(03) வெளியிடப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக பரீட்சைத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

  அத்துடன், கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு, பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும் அதே தினத்தில் காலையில் பரீட்சைகள் திணைக்களத்தால் அனுப்பி வைக்கப்படும்.

  இம்முறை உயர்தர பரீட்சைக்கு சுமார் 309,069 பரீட்சார்த்திகள் தோற்றியதுடன் அவர்களில் 236,072 பேர், பாடசாலைப் பரீட்சார்த்திகள் என்பதுடன் 72,997 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ஆவர்.

  நாடு பூராகவும் 2,180 பரீட்சை மத்திய நிலையங்களிலும் 303 இணைப்பு மத்திய நிலையங்களும் இந்தப் பரீட்சைகள் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் 3ம் திகதி வெளியிடும் சாத்தியம் Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top