Breaking News

தமிழ் மக்கள் மத்தியில் இராணுவம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளை செனல் 4 பரப்புகிறது

நாட்டின் இராணுவம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்பி, தமிழ் மக்கள் மத்தியில் வைராக்கியத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை செனல் 4 ஊடகநிறுவனத்தின் ஊடகவியலாளர் ஜோன் ஸ்னோவ் மேற்கொள்வதாக தேசியக சுதந்தழர முன்னணின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


பிட்டகோட்டையில் அமைந்துள்ள முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் “கடந்த காலங்களில் செனல் 4 ஊடக நிறுவனத்தின் ஊடகவியலளார்களுக்கு ஸ்ரீலங்காவிற்குள் பிரவேசிக்கக்கூட வாய்ப்பு வழங்பப்படவி்ல்லை. புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் செனல் 4 ஊடகவியலாளர் கெலம் மக்ரே நாட்டிற்கு வருகைத்தந்தது மாத்திரமல்ல வடக்கு கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டு காணொளிகளை பதிவு செய்து புதிய திரைப்படமொன்றை மனித உரிமைகள் பேரவையில் வெளியிட்டார்.

தற்போது அந்த தொலைக்காட்சியின் தயாரிப்பாளர் ஜோன் ஸ்னோவ் வருகைத்தந்துள்ளார். சுற்றுலா வீசாவில் நாட்டிற்கு வந்த அவர், தமிழ் மக்கள் மத்தியில் இராணுவத்தினர் மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக வைராக்கியத்தை ஏற்படுத்தும் வேலைகளை அவர் செய்கிறார். மேற்குலக நாடுகள் தங்கள் விருப்பத்திற்கு இணங்க ஆடுவதற்கு இந்த அரசாங்கம் இடமளித்துள்ளது.

ஜோன் ஸ்னோவ் போன்றவர்கள் நாட்டிற்கு வருகைத்தந்து இராணுவம் மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்புவதோடு தமிழ் மக்களின் மனங்களை மாற்றி தனியான மாநிலத்தை உருவாக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றனர். அவர் இராணுவத்திற்கு எதிராக மற்றுமொரு திரைப்படத்தை உருவாக்குவதற்கான காணொளிகளை பதிவு செய்துள்ளார்.

மனித உரிமைகள் என்ற விடயத்தை கையில் எடுத்துக்கொண்டு நாட்டை பிரிக்கும் செயற்பாடுகைளை முன்னெடுக்கவே செயத் ரா-அத் அல் ஹுசைன் நாட்டிற்கு வருகிறார்.“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.