Breaking News

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுப்பு (படங்கள் இணைப்பு)

மன்னார் - சின்னக்கடைப் பகுதியில்,பொதுவிளையாட்டு மைதானத்துக்கு முன்பாகவுள்ள வீடொன்றில் இருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவருடைய சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார்- சின்னக்கடையைச் சேர்ந்த பி.யூட் கோடிஸ்வரன்(வயது 48) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரின் மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் குறித்த நபர் வெளிநாட்டில் இருந்து கடந்த 8 வருடங்களுக்கு முன் இலங்கைக்கு வந்து மன்னாரில் வீடொன்றை வாடகைக்கு பெற்று தனிமையில் வசித்து வந்ததாகவும், பாடசாலை மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நீண்ட காலமாக ஆங்கில பாடம்கற்பித்து வந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையிலேயே குறித்த நபர் மர்மமான முறையில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.