Breaking News

இலங்கைக்கு நாசா எச்சரிக்கை

இவ்வருடம் எல்நினோ (El Nino ) தாக்கத்தால் இலங்கை பெரும் அழிவுகளைச் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல், வெள்ளம் மற்றும் வறட்சி ஆகிய அனர்த்தங்களை இலங்கை எதிர்நோக்கவேண்டிவரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை எல்நினோ தாக்கத்தால் இலங்கையைப் போல் பல நாடுகள் பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிவருமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் குறைவடைவதால் கடல் நீரின் வெப்பநிலை அதிகரிக்குமெனவும் இதனால் இயற்கை அழிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது.