சுரேஸின் கருத்தை நிராகரித்தார் சீ.வீ.கே
சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது பொய்க்குற்றச்சாட்டு என சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் அடுத்துவரும் ஒரு சில வாரங்களில் அது வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் வெளியான செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என மேலும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படப்போவதாக தகவல் கசிந்தமை குறிப்பிடத்தக்கது.








