இந்திய பாடசாலை மாணவன் கிரிக்கெட்டில் உலக சாதனை
ஒரு இன்னிங்ஸில் ஆயிரம் ஓட்டங்களை குவித்தவர் என்ற உலக சாதனையை இந்திய பாடசாலை மாணவர் ஒருவர் நிலைநாட்டியுள்ளார்.பிரனாவ் தனவடே என்ற மாணவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
கேகாஜீ காந்தி பாடசாலையின் சார்பில் போட்டியில் பங்கேற்ற தனவடே, ஆர்யாகுருகுரு என்ற பாடசாலைக்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இரண்டு நாள் போட்டியில் குறித்தமாணவர் ஆட்டமிழக்காது 1009 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இதற்கு முன்னர், ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட சாதனையை இந்திய வீர ஆதர் கொலிங்ஸ் நிகழ்த்தியிருந்தார்.1899ம் ஆண்டில் 628 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டு சாதனை நிகழ்த்தியிருந்தார்.உலக சாதனை பற்றி அறிந்திருக்கவில்லை என குறித்த மாணவர் தெரிவித்துள்ளார்.








