“சிங்கலே” வாசகம் தேசிய அமைப்பாக பரிணாமம்
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பாரியளவில் பேசப்பட்டு வந்த “சிங்கலே” பெயருக்குரிய குழு நேற்று தனது முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தியது.
கடந்த காலத்தில் சிங்கள பௌத்த கடும்போக்கு அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய மெடில்லே பஞ்சாலோக தேரர் இந்த சிங்கலே அமைப்பின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த “சிங்கலே” அமைப்பு “சிங்கலே தேசிய சம்மேளனம்” எனும் பெயரில் இயங்கவுள்ளதாக அதன் தலைவராகவுள்ள யக்களமுல்ல பவர தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கலே எனும் பெயர் பிரபல்யமடைய காரணமாக இருந்த, தனது கையில் பச்சை குத்திய நாமல் பண்டார என்பவரும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார். இவர் இவ்வமைப்பின் தேசிய பிரச்சார செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.








