Breaking News

கூட்டமைப்பை பிளவு படுத்துவது விக்னேஸ்வரனின் எண்ணம் அல்ல - கலாநிதி குமரகுருபரன் கருத்து

தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்துவதோ அதிலிருந்து விலகிசெல்வதோ ஒருபொழுதும் முதலமைச்சர் நீதியரசர் சி.வீ. விக்னேஸ்வரனின் எண்ணப்பாடு அல்ல.என முதலமைச்சர் உறுதியாக தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்துவதோ அதிலிருந்து விலகிசெல்வதோ கிஞ்சித்தும் முதலமைச்சர் நீதியரசர் சி.வீ. விக்னேஸ்வரனின் எண்ணப்பாடு அல்ல என்பதை நேற்றையதினம் நான் அவரை தொடர்பு கொண்டு அளவளாவிய போது மிக தெளிவாக அவர் எனக்கு எடுத்துரைத்தார்.

இதனை கூறுவதற்ற்கும் பேசுவதற்கும் முற்றிலும் அருகதை உடையவன் நான் ஏனென்றால் முதன் முதலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அர்த்தமுடைத்தாய் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக உழைத்த வன் பங்காளிகளாக கையொப்பமிட்ட நால்வரில் ஒருவன் என்பதை கௌரவ இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் அகியோர் நன்கு அறிவர். 

அன்று சக கட்சிசெயலாளர்களாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொதுசெயலாளராக அவர்களுடன் இணைந்து கையொப்பமிட்ட நால்வரில் இரண்டாமவர் நான். எனவே எந்த நோக்கோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு அர்த்தமுடைத்தாய் உருவாக்கப்பட்டதோ அதுதான் தமிழ் மக்களின் பல முள்ள அரசியற் சக்தியாக அனைவரையும், பங்காளிகட்சிகள் அனைத்தையும் அரவணை த்து தமிழர் தம் அரசியற் சக்தியாக இலக்கை அடையும் வரையேனும் வீரியமுடன் செயற் படவேண்டியது காலத்தின் கட்டாய தேவை யாகும்.

முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனையோ தமிழரசுகட்சி தலைவரையோ அதன் தற்கால பிரமுகர்களையோ விமர்சித்தவருமல்ல தனிப்பட்ட ரீதியில் அநாகரீகமாக வசையுரைத்தவருமல்ல. மாறாக ஓரிரு தமிழரசுகட்சி இளவல்கள் தான் அவரை விமர்சித்திருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.எது எப்படி இருந்தபோதும் தமிழர் பேரவை ஒரு அரசியற் கட்சியாக அமையும் நோக்கமோ அல்லது தமிழ்தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நோக்கமோ அற்றது.

அது ஒரு பரந்துபட்ட கருத்துக்களை ஆராயும் அனைவரும் கருத்துக்கூறகூடிய வல்லமையுள்ள களமாகவே உருவாக்கப்பட் டது. ஆனால் தமது சுயநலன்களுக்காக சிலர் அதனை ஊதி பெருப்பித்து தேவையற்ற பிளவிற்கு வழிகோலுதல் தமிழரையும் தமிழ் தலைமையையும் மலினப்படுத்துவதாகவே அமையும் . 

தமிழ் தலைமைகள் ஒரே குரலில் ஒன்று பட்டு பேசுங்கள் ஒன்று படுங்கள் என்று இலங்கை வந்த இந்திய வெளியுறவு செய லாளர் நாங்கள் அவரை இந்திய உயர்ஸ்தா னிகர் இல்லத்தில் சந்தித்தபோது தெரிவித்த மையை இந்தவிடத்தில் நினைவு கூற விரும்புகின்றேன் .

இன்று கூட்டமைப்பு என்பது யாது என்றால் அதன் பங்காளிக்கட்சிகள் கூட்டுப்பொறு ப்புடன் பங்காற்ற அனுமதிக்கப்படுகின்றார்களா? ஒரு கட்சியை சேர்ந்த மூவர் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பா ? அனைவரும் கருத்து பரிமாறக்கூடிய களம் தேவை எனும் போது இவ்வாறு கேள்விகள் எழுவது நியாயமே.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்  இரா சம்பந்தன் அவர்களுக்கு தெரியும் கூட்டமைப்பு உருவான காலத்திலும் அன்று முதல் பல் வேறு சந்திப்புகளிலும் நான் அவ ரோடு நெருங்கி பழகியவன். அவருடைய சாணக்கியத்தை பாராட்டி வருபவன் என்பது அவருக்கே தெரியும்.

அந்தவகையில் அவர் மிக பொறுப்புடன் தன்னை அண்டியவர் களையும் அறிவுரை கூறி அனைவரையும் அரவணைத்து கூட்ட மைப்பின் ஒருமைப்பாட்டை காத்திடுமாறு அன்புரிமையோடு கேட்டுக்கொள்கின்றேன் எனவும் கலாநிதி குமரகுருபரன் தெரிவித்து ள்ளார்.