கருணா, டக்ளசிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை-த.ம.பேரவை(முழுமையான விபரம்)
அண்மையில் வடமாகாண முதலமைச்சர் மற்றும்
வடக்கு கிழக்கு சிவில் மற்றும் அரசியல் கட்சிகளை உள்ளடக்கி ஆரம்பமான தழிழ் மக்கள் பேரவை தொடர்பில் பலர் பொய்ப்பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.
வடக்கு கிழக்கு சிவில் மற்றும் அரசியல் கட்சிகளை உள்ளடக்கி ஆரம்பமான தழிழ் மக்கள் பேரவை தொடர்பில் பலர் பொய்ப்பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.
இந்த வகையில் நடாத்தப்படும் ஒரு மிப்பெரிய பிரச்சாரம் தமிழ் மக்கள் பேரவையில் கருணா மற்றும் டக்ளசை இணைவதற்காக முதலமைச்சர் அழைத்துள்ளதாகவும் விரைவில் அவர்கள் இணைவர்கள் என்றும் செய்திகள் பரப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இதனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிவதற்காக தமிழ்கிங்டொத்தின் விசேட செய்தியாளர் தமிழ் மக்கள் பேரவையின் முன்னணி தலைவர்கள் இருவரையும் இணைத்தலைவர் ஒருவரையும் நேரடியாக தொடர்பு கொண்டு வினவியபோதே இவை யாவும் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகள் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உண்மையில் நடந்தது என்ன?
கேள்வி- கருணா மற்றும் டக்ளசை தமிழ் மக்கள் பேரவைக்கு முதலமைச்சர் அழைத்துள்ளார் என்ற செய்தி உண்மையா?
பதில்- இது முற்றுமுழுதாக புனையப்பட்ட செய்தியாகும் அந்த கூட்டத்தில் நாமும் இருந்தோம் பத்திரிகையாளர் கேட்ட கேள்வி- வேறு நபர்களையும் பேரவையிரல் இணைப்பீர்களா? என்று அதற்கு பதிலளித்த முதல்வர் இந்த பேரவை தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்டது, த.ம.பேரவைக்கு என்று ஒரு கொள்கை உண்டு அதனை ஏற்று வருபவர்கள் யாராக இருந்தாலும் இணைத்துக்கொள்வோம் குறிப்பாக சுமந்திரனும் எமது கொள்கையை ஏற்று வருவாரானால் அவரும் வந்து இணையலாம் என்றே சொல்லியிருந்தார்.
அத்தோடு இந்த பேரவை ஆரம்பமானதும் உதயன் சுடரொளி பத்திரிகையை சேர்ந்தவர்கள் கருணாவிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இவ்வாறு ஒரு பேரவை ஆரம்பித்திருக்கிறார்கள் நீங்கள் அதில் இணைந்து கொள்வீர்களா என கேள்வி எழுப்பியிருக்கிறார்கள் அதற்கு கருணாவும் தான் இணையலாம் எனத் தெரிவித்திருக்கிறார் அதனை இவர்கள் தமிழ் மக்கள் பேரவை அழைத்திருப்பதாக திருவுபடுத்தியிருக்கிறார்கள்.
கேள்வி- தமிழ் மக்கள் பேரவையிலிருந்தோ முதலமைச்சரிடமிருந்தோ கருணாவுக்கோ டக்ளசிற்கோ அழைப்பு விடுக்கப்பட்டதா?
பதில்- ஒருபோதுமில்லை
கேள்வி- சிவா பசுபதி அவர்களை பேரவைக்கு அழைத்தாக கூறப்படுகின்றதே?
பதில்- சிவா பசுபதி ஒரு வயதானவர் அனுபவசாலி அவர் விரும்பினால் பேரவையோடு இணைந்து பணியாற்றலாம் அல்லது ஒத்துழைப்பு வழங்காமலிருக்கலாம் அதற்காக பேரவை ஒருபோதும் செயற்படாமல் இருந்துவிட முடியாது. எமக்கு தொடர்ந்து பல மட்டங்களிலிருந்தும் புத்திஜீவிகள் அறிஞர்களுடைய ஆதரவு மற்றும் தமிழ் அமைப்புக்களிடமிருந்தும் ஆதரவு கிடைத்து வருகின்றது என்றும் தெரிவித்தார்கள்.
தமிழ்மக்கள் பேரவை கூட்டநிறைவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு முழு
உதயமானது தமிழ் மக்கள் பேரவை -காணொளி இணைப்பு(இரண்டாம் இணைப்பு )
தமிழ்மக்கள் பேரவை ஏன் முதலமைச்சர் விளக்கம்(காணொளி இணைப்பு)
தனிமனித முடிவுகளை இனிமேல் அனுமதிக்கமுடியாது – மருத்துவர் லக்ஸ்மன்(காணொளி)








