Breaking News

அவுஸ்ரேலிய அகதிமுகாமில் மன்மதலீலை-தமிழ் அதிகாரி பணிநீக்கம்!!

ஒஸ்ரேலிய தடுப்புமுகாம்களில் ஒன்றான மைற்றாவில்
கடமையிலிருந்த ஒரு தமிழ் அதிகாரியான இலங்கைத்தமிழரும் அவுஸ்ரேலிய சின்னக்கதிர்காமர் என ஊடகப்பரப்பில் அறியப்பட்டவரும் சுமந்திரனின் செல்லப்பிள்ளையுமான குறித்த நபரே இவ்வாறு தவறான பாலியல் நடத்தை காரணமாக பணீநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு குடிவரவுதிணைக்களம் அறிவித்துள்ளது.

ஒஸ்ரேலிய தடுப்புமுகாம்களில் அகதிகள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்வதாக சர்வதேச மனிதவுரிமை நிறுவனங்கள் குற்றம்சாட்டிவரும் நிலையில் இச்சம்பவம் பற்றிய செய்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த முகாமில் தங்கியிருக்கும் பெண்கள் மற்றும் சக பெண்ஊழியர் என இவரின் பாலியல் தொல்லைகள் எல்லைமீறவே பாதிக்கப்பட்ட ஈரானிய பெண்னொருவரால் விடையம் விக்ரோறியா பொலிசுக்கு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் 13 இற்கும் மேற்பட்ட குற்றசாட்டுகள் குறித்த நபர் மீது இருந்ததாகவும் அதனால் உடனடியாக அவ்வதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் அவுஸ்ரேலிய குரிவரவு அதிகாரி ஒருவரூடாக தமிழ்கிங்டொம் இணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இலங்கை உட்பட பலநாடுகளிலிருந்து உயிர் அச்சுறுத்தல் காரணமாக தஞ்சமடையும் அகதிகளை அந்நாட்டு அரசு தனது அயல்நாடுகளுக்கு அனுப்பி அங்கு தடுத்துவைப்பது அண்மைக்காலங்களில் ஊடகங்களில் கவனத்தை பெற்றிருந்தது.

இதற்கு எதிராக பல போராட்டங்களை அகதிகள் செயற்பாட்டாளர்கள் மேற்கொண்டுவருகின்றார்கள். இந்தப்பின்னனியில் தற்போது வெளிவந்துள்ள செய்தி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. குறித்த அதிகாரி அகதிகளுடன் மட்டுமன்றி அங்கு கடமையிலிருந்து பெண் அதிகாரி ஒருவர் உட்பட பலருடன் தவறான பாலியல் நடத்தையை வெளிக்காட்டியதாக முறைப்பாடு செய்ய்பட்டுள்ளது.

தாயகத்திலிருந்தும் வெவ்வேறு நாடுகளிலுமிருந்து தஞ்ச கோரிக்கையுடன் சென்ற அகதிகளை அவுஸ்திரேலியா கடுமையாக நடாத்திவருவதையிட்டு அந்த நாட்டிலுள்ள ஈழத்தமிழர்களும் அவுஸ்ரேலிவாழ் மக்களும் போராட்டங்களை நடாத்திவருகின்ற நிலையில் தஞ்சமைந்துள்ள உறவுகள்மீது ஒரு தமிழனே இவ்வாறு நடந்துகொண்டுள்ளமையையிட்டு தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதிர்ப்த்தியை தோற்றுவித்துள்ளது.
அகதிகளின் விடிவிற்காய் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது
அகதிகளின் விடிவிற்காய் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது

அகதிகளின் விடிவிற்காய் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது

அகதிகளின் விடிவிற்காய் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது

அகதிகளின் விடிவிற்காய் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது

அகதிகளின் விடிவிற்காய் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது
குறித்த நபர் கடந்த தேர்தல் காலத்திலிருந்து சுமந்திரனின் தீவிர ஆதரவாளராகவும் முதலமைச்சருக்கு எதிராகவும் மிகக்கடுமையாக செயற்பட்டிருந்தார் என்பதோடு சுமந்திரனின் அவுஸ்ரேலிய பிரச்சார வேலைகளுக்கு முகவராகவும் இருந்துள்ளார். அத்தோடு இவர் கடந்தகாலத்தில் சுடரொளி பத்திரிகைக்கும் அண்மையில் கொழும்புமிறர் பத்திரிகையிலும் சுமந்திரனுக்கு ஆதரவாகவும் முதலமைச்சருக்கு எதிராகவும் எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய ஆங்கில மூலச்செய்தி