Breaking News

அவுஸ்ரேலிய மன்மதன் தலைமையில் சர்வதேச பெண்கள் தினம்(விபரம் முழுமையாக)

அவுஸ்திரேலிய தடுப்புமுகாமில் பெண் பாதுகாப்பு
ஊழியர்கள் மற்றும் ஈரானிய அகதிகள் மீதான தவறான பாலியல் நடத்தைக்காக பணிநீக்கம் செய்யப்பட்டவரின் தலைமையில் சர்வதேச பெண்கள் நாளை முன்னிட்டு விடுதலைப்புலிகளின் பெண்கள் பிரிவின் அரசியல்துறை பொறுப்பாளரான தமிழினியின் புத்தகம் வெளியிட்டு வைக்கப்படவிருக்கின்றது.

என்ன கண்ணை கட்டுகின்றதா? என் இனமே !

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி என்றார்கள். ஆனால் வரம்புமீறும் கட்டாக்காலிகளை வைக்கவேண்டிய இடத்தில் வைத்திருந்தால் இந்த நிலைவந்திருக்குமா?

விடுதலைக்காக போராடிய ஒரு விழுதின் எழுத்துக்களை சிறைபட்டிருந்தபோது சிந்திய வேதனையின் குமுறல்களை இயலாத்தனத்தில் எழுப்பிய அழுங்குரல்களை அச்சடித்து இன்றும் வீச்சோடு இருக்கும் விடுதலையின் வீரியத்தை கேள்விக்குட்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டிருக்கிறது இப்புத்தகம்.

என்னதான் விமர்சன கருத்துக்களை முன்வைத்திருந்தாலும் அதனை வெளியிடுவதற்கு ஒரு அடிப்படை தகுதி வேண்டாமா?

அவுஸ்திரேலிய தேசிய தொலைகாட்சியில் இந்த தெய்வீக மைந்தனை பற்றி என்ன சொல்லியிருந்தது? ஈரானிய பெண்ணை நெருங்கி How are you honey? என தனது தேவைக்கு அழைத்துள்ளார். தனியே அந்தப்பெண்ணின் அறைக்கு சென்று இவர் ஆடிய கூத்தை தேசிய தொலைகாட்சி படம்போட்டு காட்டியது யாவரும் அறிந்ததே.

இது மட்டுமல்ல எம் உறவுகளே!
13 குற்றசாட்டுக்கள் இவர் மீது சுமர்த்தப்பட்டு. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே வேலையிலிருந்து கலைக்கப்பட்டார்.

ஆனால் இவர் எமது தமிழ்ச்சமூகத்திற்கு சொல்வது என்ன தெரியுமா?
I am on sick leave. அதாவது தான் விடுமுறையில் நிற்பதாக.

அண்மைக்காலமாக தமிழ்த்தேசியப்பரப்பில் குறிப்பாக அவுஸ்ரேலியாவில் சுமந்திரனுக்கு எதிராக இளைணர்கள் நடாத்திய போராட்டத்தைக்கூட படு கொச்சையாக கொழும்புமிறர் இணையத்திற்கு (இணைப்பை பார்க்க அழுத்தவும்)‘‘கங்காருகளிடம் அகப்பட்ட சுமந்திரன்  ‘‘ என தலைப்பிட்டு எழுதியிருந்த அவர் போராட்டம் நடாத்திய அவுஸ்ரேலிய இளைஞர்களை ‘‘இரையை கண்ட விலங்குகள் போல அவர்கள் கடித்து குதறுவதற்கு பாய்ந்து திருந்ததாக‘‘ எழுதியிருந்தார் ஆனால் இவர் 13இற்கு மேற்பட்ட பெண்களின் வாழ்வை சீரழித்தமையை பற்றி நாம் எப்படி எழுதுவது.

அத்தோடு இந்நூலை வெளியீடு செய்தவர்கள் யாரென பார்த்தால் விடுதலைப்போராட்டம் பற்றிய அபத்தமான கருத்துக்களை அவ்வப்போது விதைத்துவரும் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டமை ஆச்சரியப்படவைக்கும். 

அதனால் விசமத்தனமான விடயங்களை விதைப்பதற்கான களமாக தமிழினியின் கவிதைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்ற வினாவை எழவைக்கின்றது அப்புத்தகத்தின் வெளியீட்டு மையம்.

தமிழினி – ஒரு காலத்தின் பிரசவம். அடக்கப்பட்ட தேசத்தின் அவதாரம். ஏவிவிடப்பட்ட அடக்குமுறையை இல்லாதொழிக்க அவலத்தை தந்தவனுக்கே அவலத்தை திருப்பிக்கொடுக்க வேண்டிய கையறு நிலையிலிருந்த போராட்டத்தின் குறியீடு.

கட்டவிழ்ந்த காலப்பெருவெள்ளம் ஆயிரமாயிரம் வீரர்களின் தியாகத்தால் கட்டப்பட்ட கோட்டைகளையும் அள்ளிச்சென்றுவிட்டது.
சிறைவாழ்வுக்குள் சிக்கிக்கொண்டு அரச அடக்குமுறையின் அடக்குமுறைக்குள் நின்றுகொண்டு படைப்புக்களை உண்மைத்தன்மையுடன் படைக்கமுடியாது.

அதற்காக அத்தகைய படைப்புக்களை எதிர்க்கதேவையில்லை. அதுவும் எழுத்தாளரே இல்லாத நேரத்தில் வரும் படைப்பில் எத்தகைய இடைச்செருகல்கள் இருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை.

அதனைவிட அதனை வெளியிடுவோர் பற்றிய கவனம் இருப்பின் அதனை இன்னும் புரிந்துகொள்வது இலகு. சர்வதேச பெண்கள் நாளில் பெண்களின் உரிமைகளை போற்றி அதற்காகவே வாழும் பெண்ணிய செயற்பாட்டாளர்களே தமிழினியின் படைப்புக்களை வெளியிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. தடுப்புமுகாமில் இருந்த அகதிகளின் மேல் தவறான பாலியல் நடத்தைக்காக பணிநீக்கம் செய்யப்பட்டவரின் அறிமுகத்தோடு இது வெளிவருவதை அவுஸ்ரேலிய வாழ் ஈழ ஊணர்வாளர்கள் ஏற்றுக்கொள்ளுகின்றார்களா என்பதும் எமது கேள்வியாகும்.

காலக்கொடுமையை அறிந்துகொள்ள!!!

நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்
email: atlas25012016@gmail.com
Phone: Shanthini 0404703769
Muruga Poopathy 0416625766

தொடர்புடைய முன்னைய செய்தி