Breaking News

இன்­றுடன் நிறை­வ­டையும் நிபு­ணர்­கு­ழுவின் பணிகள்

அர­சி­ய­ல­மைப்பு சீர் திருத்தம் தொடர்­பாக பொது மக்­களின் கருத்­துக்கள் மற்றும் ஆலோ­ச­னை­களை பெற்றுக் கொள்ளும் நட­வ­டிக்கைகள் இன்­றுடன் நிறை­வ­டை­கின்­றன. இறு­தி­நா­ளான இன்று அம்­பாறை மற்றும் இரத்­தி­ன­புரி மாவட்­டங்­களில் கருத்­துக்­களை பெறும் நட­வ­டிக்­கைகள் இடம் பெறும் என நிபுணர் குழுவின் தலைவர் லால் விஜே­நா­யக்க தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர்­மேலும் தெரி­விக்­கையில்,

அர­சி­ய­ல­மைப்பு சீர் திருத்தம் தொடர்­பாக பொது­மக்­களின் கருத்­துக்­களை கேட்­ட­றியும் நிபு­ணர்­குழு கடந்த ஜன­வரி 18ஆம் திகதி முதல் 22ஆம் திக­தி­வரை கொழும்பு மாவட்­டத்தில் பொது மக்­களின் கருத்­துக்­களை கேட்­ட­றியும் நட­வ­டிக்­கையை ஆரம்­பித்­தது.

இந்த காலப்­ப­கு­தியில் நாங்கள் எதிர்­பார்த்­த­தையும் விட மக்கள் மிகவும் ஆர்­வத்­துடன் தங்கள் கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்­தனர். அந்­த­வ­கையில் மின்­னஞ்சல் மூல­மாக 400க்கும் மேற்­பட்டோர் தங்கள் கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்­தனர். 140பேர் எழுத்­து­மூ­லமும் 70பேர் பெக்ஸ் ஊடா­கவும் யோச­னை­களை தெரி­வித்­தி­ருந்­தனர். 258பேர் நேர­டி­யாக எங்கள் முன்­தோன்றி தங்­க­ளது கருத்­துக்­களை மிகவும் ஆர்­வத்­துடன் தெரி­வித்­தனர்.

கொழும்பு மாவட்­டத்தில் ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்கள் 20பேரும் ஒன்­றாக இருந்து பொது மக்­களின் கருத்­துக்­களை கேட்­ட­றிந்து கொண்டோம். பெப்­ர­வரி 1ஆம் திகதி முதல் நாங்கள் 5குழுக்­க­ளாக பிரிந்து ஒரு மாவட்­டத்­துக்கு 2நாட்கள் வீதம் ஒதுக்கி மக்­களின் கருத்­துக்­களை கேட்­ட­றிந்தோம். அத்­துடன் மூன்று மாதங்­க­ளுக்குள் இது­தொ­டர்­பான பூரண அறிக்­கை­யொன்றை அர­சி­ய­ல­மைப்பு குழு­வுக்கு சமர்ப்­பிக்­க­வுள்ளோம்.

பொது­மக்கள் அர­சி­ய­ல­மைப்பு சீர் திருத்தம் தொடர்­பாக கருத்­துக்­களை தெரி­விக்­கும்­போது, மத சுதந்­திரம், தேர்தல் முறை, மக்­களின் அடிப்­படை உரிமை, கருத்து சுதந்­திரம் போன்ற 27 தலைப்­பு­களில் கருத்­துக்­களை பதி­வு­செய்து­கொண்டோம். அத்­துடன் இந்த காலப்­ப­குதில் மத­கு­ருமார், ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் சபா­நா­யகர் ஆகி­யோ­ரையும் சந்­தித்து கருத்­துக்­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் பெற்­றுக்­கொண்டோம்.

அர­சி­ய­ல­மைப்பு சீர் திருத்தம் தொடர்­பாக பொது­மக்­களின் கருத்­துக்­களை கேட்­ட­றியும் இறுதி நாளான இன்று அம்­பாறை மற்றும் இரத்­தி­ன­புரி மாட்­டங்­களில் அமர்­வுகள் இடம்­பெ­ற­வுள்­ளன. அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் கிடைக்காத அரசியல் கட்சிகள் தொழிற் சங்கங்கள் மற்றும் பொது மக்கள் பலர் மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்குமாறு கேட்டுக்கொண்டதற்கினங்க மார்ச் மாதம் இறுதிப்பகுதியில் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவுள்ளோம் என்றார்.