Breaking News

ஊர்காவற்துறை பகுதியில் கடற்படை சிப்பாய் தற்கொலை

ஊர்காவற்துறை - காரைநகர் பிரதேசத்திலுள்ள கடற்படை முகாம் சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

காரைநகர் - எலார கடற்படை முகாம் சிப்பாய் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கோகருல்ல - கோடுஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான ஒருவரே சம்பவத்தில் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

சடலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன. தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை ஊர்காலற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.