பெல்ஜிய விமான நிலைய தற்கொலை தாக்குதலில் 13 பலி
பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸ்சிலுள்ள விமான நிலையத்தில் இடம்பெற்ற வெடிச் சம்பவம் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 35 பேர் வரை காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான நிலையத்தில் வெடிச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் துப்பாக்கி பிரயோகம் மற்றும் அரபு மொழியில் குரல் எழுப்பும் சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரசல்ஸ்சில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறியுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன், தம்மால் இயன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என கூறியுள்ளார்.பிரசல்ஸ்சில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தமது தலைமையில் அவசர நிலைமைகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரித்தானிய அரச குழுவான கோப்ராவின் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளதாக டேவிட் கெமரன் குறிப்பிட்டுள்ளார்.








